search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைரல் வீடியோ"

    • நடந்த சம்பவத்தை செல்போனில் பதிவு செய்வதை பார்த்த காவலர் செல்போனை பறிக்க முயற்சிக்கிறார்.
    • அசோக சக்கரம் இல்லாததால் அது இந்திய கொடி அல்ல என ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் சீக்கியர்களின் வழிபாட்டு தலமான பொற்கோவிலுக்கு சென்ற ஒரு பெண் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண் தனது முகத்தில் இந்திய தேசியக் கொடி போன்று மூவர்ணத்தை வரைந்து சென்றதால் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் பொற்கோவில் பாதுகாவலர், அந்த பெண்ணை உள்ளே செல்லக்கூடாது என்று சொல்கிறார். அந்த பெண், இது இந்தியா இல்லையா? என் கேட்கிறார். அதற்கு பதிலளித்த காவலர் 'இது பஞ்சாப்' என கூறுகிறார். இது இந்தியா இல்லையா என்று காவலரிடம் திரும்பத் திரும்பக் கேட்டதற்கும், அவர் இல்லை என்றே தலையசைக்கிறார். நடந்த சம்பவத்தை அந்தப் பெண் தனது செல்போனில் பதிவு செய்வதை பார்த்த காவலர் செல்போனை பறிக்க முயற்சிக்கிறார். அத்துடன் அந்த வீடியோ நிறைவடைகிறது.

    அந்த அதிகாரியின் செயலுக்கு பொற்கோயிலை நிர்வகிக்கும் ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி மன்னிப்பு கேட்டுள்ளது. அந்த பெண்ணின் முகத்தில் வரைந்திருந்த சின்னத்தில் அசோக சக்கரம் இல்லாததால் அது இந்திய கொடி அல்ல, அரசியல் கொடியாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

    • தரை எவ்வளவு அழுக்காக இருக்கிறது என்று பாருங்கள். எங்களை இங்கேதான் உட்கார வைக்கிறார்கள்.
    • வீடியோ சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்துள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா மாவட்டத்தில் லோஹாய்-மல்ஹர் கிராமத்தை சேர்ந்தவர் சிறுமி சீரத்நாஸ். இவர் பிரதமர் மோடியிடம் ஒரு கோரிக்கை வைத்து பேசும் வீடியோ பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது. அதில் சிறுமி சில இடங்களை காட்டி விளக்குகிறார். வீடியோவில், மோடிஜி, நான் இங்கு அரசு பள்ளியில் படித்து வருகிறேன். தயவு செய்து எங்களுக்கு ஒரு நல்ல பள்ளிக்கூடத்தை கட்டி தாருங்கள். தரை எவ்வளவு அழுக்காக இருக்கிறது என்று பாருங்கள். எங்களை இங்கேதான் உட்கார வைக்கிறார்கள்.

    எங்கள் பள்ளி இருக்கும் பெரிய கட்டிடத்தை உங்களுக்கு காட்டுகிறேன். இந்த கட்டிடம் 5 வருடங்களாக எவ்வளவு அழுக்காக இருக்கிறது என பாருங்கள். இதுதான் எங்கள் வகுப்பறை. எங்களுக்காக ஒரு நல்ல பள்ளிக்கூடத்தை உருவாக்கி தருமாறு கேட்டு கொள்கிறேன்.

    தரையில் உட்கார்ந்தால் எங்களது சீருடைகள் அழுக்காகிறது. சீருடை அழுக்காகிவிட்டால் அம்மா எங்களை அடிக்கிறார். தயவு செய்து மோடிஜி பள்ளியின் உட்கட்டமைப்பை அழகாக கட்டி கொடுங்கள் என உங்களிடம் கேட்டு கொள்கிறேன். மோடிஜி நீங்கள் எல்லோருடைய பேச்சையும் கேட்கிறீர்கள். தயவு செய்து நான் சொல்வதையும் கேளுங்கள். எங்களுக்கு ஒரு நல்ல பள்ளிக்கூடத்தை கட்டி தாருங்கள் என அந்த வீடியோவில் சிறுமி கூறுகிறார். இந்த வீடியோ சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்துள்ளது.

    • ஒரு நபர் துப்பாக்கியுடன் வந்து, சாலையில் வந்துகொண்டிருந்த பைக்கை நிறுத்தி ஏற முயற்சி செய்தார்.
    • கான்ஸ்டபிள் மனோஜ் பாய்ந்து சென்று அந்த நபரை பிடித்து தரையில் தள்ளினார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் சினிமா பாணியில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், துப்பாக்கியுடன் மிரட்டிய குற்றவாளியை தைரியமாக எதிர்கொண்டு மடக்கிப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    டெல்லி நிலோதி பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. தலைமைக் காவலர்கள் மனோஜ், தேவேந்தர் ஆகியோர் நேற்று இரவு நிலோதி பகுதியில் உள்ள மச்சி சவுக் அருகே ரோந்து சென்றுள்ளனர். அப்போது ஒரு நபர் துப்பாக்கியுடன் வந்து, சாலையில் வந்துகொண்டிருந்த பைக்கை நிறுத்தி ஏற முயற்சி செய்தார். இதைக் கண்ட போலீசார் அந்த நபர்களை பிடிக்க முயன்றனர்.

    பைக்கில் வந்த நபர் தப்பிச் செல்ல, துப்பாக்கி வைத்திருந்த நபர், கான்ஸ்டபிள் மனோஜை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டினான். ஆனால் கான்ஸ்டபிள் மனோஜ் ஒரு செங்கல்லை எடுத்து வீசி தாக்கினார். அத்துடன் பாய்ந்து சென்று அந்த நபரை பிடித்து தரையில் தள்ளினார். உடனே அருகில் இருந்தவர்களும் ஓடிவந்து அந்த நபரை சுற்றி வளைத்து அடித்து உதைத்தனர். பின்னர் அந்த நபர் கைது செய்யப்பட்டார். பைக்கில் தப்பிச் செல்ல முயன்ற நபரை மற்றொரு கான்ஸ்டபிள் தேவேந்தர் பிடித்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    • தலையில் ஹெல்மட் அணிந்திருக்கும் அவர், கையில் வாக்கி-டாக்கி வைத்திருக்கிறார்.
    • இந்த வீடியோவைப் பார்த்த பலர் திகைப்புடன் தங்கள் கவலையை பகிர்ந்துள்ளனர்.

    வெடித்து சிதறும் எரிமலையின் குழம்பான லாவா அருகே நிற்கும் மனிதர் குறித்த வீடியோ ஒன்றை பார்த்த சமூக வலைதள பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

    ட்விட்டரில் வெளி வந்துள்ள இந்த வீடியோவில் எரிமலை குழம்பு பெருகி கடல் போல் காணப்படும் பகுதியில் இருக்கும் ஒரு பாறையின் விளிம்பு பகுதிக்கு ஒரு மனிதர் மெதுவாக செல்கிறார்.

    அவருக்கு அருகில் எரிமலை குழம்பு தீப் பிழம்புடன் வந்து விழுகின்றது. தலையில் ஹெல்மட் அணிந்திருக்கும் அவர் கையில் வாக்கி-டாக்கியை வைத்திருக்கிறார். இதன் மூலம் அவர் ஆய்வாளராகவோ அல்லது எரிமலை குறித்து ஆய்வு செய்பவராகவோ இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. 

    இந்த வீடியோ எந்த பகுதியில் எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் இல்லை. இதை பார்த்த பலர் திகைப்புடன் தங்கள் கவலையை பகிர்ந்துள்ளனர். முழு அளவில் பாதுகாப்பு எதுவும் இல்லாமல், எரிமலை கடலுக்கு அருகே இவ்வளவு நெருக்கமாக அந்த மனிதனால் எப்படி செல்ல முடிந்தது என்று பலர் கேள்வி எழுப்பினர்.

    ட்விட்டரில் பகிரப்பட்டதிலிருந்து இந்த வீடியோ 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. 5433 பேர் ரீ ட்வீட் செய்துள்ளனர்.56,000 க்கும் மேற்பட்டோர் வீடியோவை விரும்பியுள்ளனர்.

    • அவர் மாற்றுத்திறனாளி என்பதும், தன்னால் உடனடியாக சாலையை கடக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
    • பரவி வரும் வீடியோவால் போக்குவரத்து போலீ சாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்கால் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில், முதியவர் ஒருவர் சாலையைக் கடக்க முடியாமல் வெகு நேரமாக சாலையில் நடுவே காத்திருந்தார். போக்குவரத்தை சரி செய்யும் பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் மகேஸ்வரன், இதைப் பார்த்து அந்த முதியவர் அருகில் சென்று விசாரித்த பொழுது, அவர் மாற்றுத்திறனாளி என்பதும், தன்னால் உடனடியாக சாலையை கடக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

    அதனை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் மகேஸ்வரன், உடனடியாக அருகில் இருந்த ஒருவரின் உதவியுடன், அந்த முதியவரை கை தாங்கலாக, தூக்கிச் சென்று சாலையை கடக்க உதவி செய்தார். இதை அருகில் இருந்தவர்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோவால் போக்குவரத்து போலீ சாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. 

    • சிங்கத்தை கொஞ்சி மகிழும் பெண்ணின் வீடியோ ஒன்று தற்போது இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.
    • வீடியோவில் ஒரு பெண், நாய்க்குட்டியை போல ஒரு சிங்கத்துடன் கொஞ்சி விளையாடுகிறார்.

    சமூக ஊடகங்களில் ஆபத்தான செயல்களை கொண்ட துணிச்சலான வீடியோக்கள் அவ்வப்போது பரவி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. பார்வையாளர்களும் அந்த வீடியோக்களை பார்த்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதுண்டு.

    அந்த வகையில் சிங்கத்தை கொஞ்சி மகிழும் பெண்ணின் வீடியோ ஒன்று தற்போது இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு பெண், நாய்க்குட்டியை போல ஒரு சிங்கத்துடன் கொஞ்சி விளையாடுகிறார்.

    அந்த சிங்கம் பெண்ணின் அருகில் அவரை உரசியபடி வருகிறது. அவரது அருகில் நின்றபடி வாயை பெரிதாக பயங்கரமாக திறக்கிறது. அந்த பெண் சிங்கத்தின் தலையில் தடவுகிறார். பின்னர் சிங்கம் அந்த பெண்ணை சுற்றி திரிகிறது.

    இந்த வீடியோ பார்ப்பவர்களை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. இந்த வீடியோ இணையதளத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோ 1 கோடியே 10 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளன. 6 லட்சத்து 2 ஆயிரத்து 537 லைக்குகளையும் குவித்துள்ளது. மேலும் வீடியோவை பார்த்த 1400 பேர் கருத்துக்களையும் பகிர்ந்துள்ளனர்.

    • திரைப்படங்களின் பாடல் மற்றும் சண்டை காட்சிகள் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியில் எடுத்துள்ளனர்.
    • இப்பகுதியில் கேரளா வனத்துறையினர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்

    பொள்ளாச்சி:

    கேரளா மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சாலக்குடி அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி, உலக அளவில் பிரபலமான நீர்வீழ்ச்சியாகும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் அருவியை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறைனர் அனுமதி அளித்துள்ளனர். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களின் பாடல் மற்றும் சண்டை காட்சிகள் இந்த நீர்வீழ்ச்சியில் எடுத்துள்ளனர்.

    இந்நிலையில், வனப்பகுதியை விட்டு வெளியே வந்த ஒற்றை கடமான் அப்பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்று உணவு கேட்டு நிற்கும் வீடியோ வெளியாகி உள்ளது. சுற்றுலா பயணிகள் எடுத்த அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இப்பகுதி பாதுகாக்கபட்ட பகுதி என்பதாலும், வனவிலங்குகள் நடமாட்டம் நிறைந்த பகுதி என்பதாலும் கேரளா வனத்துறையினர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
    • தூய்மைப் பணியாளர் சிலர் குப்பையை கொட்டி செல்வது வாடிக்கையாக இருப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    கோவை:

    கோவை ஆர்.எஸ். புரம் ராமச்சந்திரா ரோட்டில் எல்இடி கடை நடத்தி வருபவர் ஜேம்ஸ். இவர் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர். இவரிடம், கடந்த 4 ஆம் தேதி தூய்மைப் பணியாளர் ஒருவர் தீபாவளி போனஸ் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது 20 ஆம் தேதிக்கு மேல் வாங்க தருகிறேன் என கூறியுள்ளார். 500 ரூபாய் கேட்டு அவர் தொந்தரவு செய்யவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி தூய்மைப் பணியாளர் ஒருவர் கடை அருகே இருந்த குப்பையை எடுத்து, கடை முன்பு போடும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை மாநகராட்சி பகுதிகளில் சில இடங்களில் பணம் கேட்டு, கொடுக்காத கடை முன்பு, தூய்மைப் பணியாளர் சிலர் குப்பையை கொட்டி செல்வது வாடிக்கையாக இருப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மாநகராட்சி நிர்வாகம் வலுக்கட்டாயமாக, வியாபரிகளிடம் தீபாவளி பணம் கேட்கும் ஊழியர்கள் சிலர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, உண்மையாக பணிபுரியும் தூய்மைப் பணியாளர் மதிக்கப்படுவார்கள்.

    • இந்த வீடியோ எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பது குறித்து விபரம் தெரியவில்லை.
    • 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் அந்த வீடியோ பெற்றுள்ளது.

    சிங்கம், புலி போன்ற காட்டு விலங்குகள் இயற்கையான அவற்றின் வாழ்விடங்களில் வாழக் கூடியவை. மிகவும் ஆபத்தான விலங்குகளாக கருதப்படும் அவைகளை செல்ல பிராணிகளாக வீடுகளில் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இரண்டு சிங்கக் குட்டிகளை செல்ல பிராணியாக வளர்த்து வரும் நபர் குறித்த வீடியோ ஒன்று இன்ஸ்ட்ரகிராம் வளைதளத்தில் பகிரப்பட்டு வைரலானது. அந்த வீடியோவில் உள்ள நபர் அருகே கார் டிக்கியில் சிங்க குட்டிகள் அமர்ந்திருக்கின்றன. அப்போது அவர் தனது கைகளால் அந்த சிங்க குட்டிகளை செல்லமாக தடவிக் கொடுக்க முயலுகிறார்.

    சில வினாடிகளில் ஒரு சிங்கக் குட்டி ஆக்ரோஷமாக சீறியவுடன் அவர் கையை எடுத்து விடுகிறார். இந்த வீடியோ எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பது குறித்து விபரம் தெரியவில்லை. இதுவரை 2 லட்சத்து 74 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும், 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் அந்த வீடியோ பெற்றுள்ளது.

    இந்த வீடியோவை பார்த்த பலர் இது ஆபத்தான செயல் என்றும், அந்த விலங்குகள் விளையாடும் பொம்மைகள் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். சிலர் இது முட்டாள்தனம் என்றும், காட்டு விலங்குகள் மீதான துஷ்பிரயோகம் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • பைக் திருடர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்கை ஸ்டார்ட் செய்து, வேகமாக ஓட்டிச் சென்றுள்ளனர்.
    • தப்பி ஓடிய திருடன் பக்கத்து காலனியில் உள்ள பூங்காவில் பதுங்கியிருந்தபோது பிடிபட்டான்.

    புதுடெல்லி:

    தெற்கு டெல்லியின் கல்காஜி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில், பைக் திருடர்கள் கேட்டில் மோதி விழுந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    சம்பவத்தன்து மதியம் 2 மணியளவில் மாநகராட்சி அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு அந்த காலனிக்குள் 2 பேர் வந்துள்ளனர். அப்போது, கூரியர் டெலிவரி ஏஜென்ட் ஒருவர் பைக்கில் சாவியை அப்படியே வைத்து விட்டு வீட்டின் காலிங் பெல்லை அடிக்க சென்றதை கவனித்துள்ளனர். உடனே அவர்கள் இருவரும், கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பைக்கை ஸ்டார்ட் செய்து, வேகமாக ஓட்டிச் சென்றுள்ளனர்.

    இதைப் பார்த்த டெலிவரி ஏஜெண்ட், தனது பைக்கை திருடிக்கொண்டு போவதாக கூச்சலிட்டார். உடனே குடியிருப்பின் காவலாளி ஓடிச் சென்று கேட்டை சாத்தினார். இதனால் கேட் மீது பைக் மோதி, பைக் திருடர்கள் இருவரும் கீழே விழுந்தனர். அவர்களில் ஒருவனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். மற்றொருவன் பக்கத்து காலனியில் உள்ள பூங்காவில் பதுங்கியிருந்தபோது பிடிபட்டான். இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    காவலாளி சரியான நேரத்தில் கேட்டை சாத்துவதும், வேகமாக சென்ற பைக் திருடர்கள் கேட்டில் மோதி விழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    • உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது.
    • இந்த இரண்டு வீடியோவையும் சமாஜ்வாடி கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. கூட்டத்தின்போது, இரண்டு எம்.எல்.ஏக்கள் செய்த காரியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    சபை நடவடிக்கையின்போது, பாஜக எம்எல்ஏ ராகேஷ் கோஸ்வாமி மொபைலில் ஆன்லைன் ரம்மி கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.

    மற்றொருவர், தனது கையில் புகையிலையை கொட்டி வாயில் போட்டு மென்றுக் கொண்டிருந்தார்.

    இந்த இரண்டு வீடியோவையும் சமாஜ்வாடி கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த வீடியோவுடன், "சபையின் கண்ணியத்தை கெடுக்கும் பாஜக எம்எல்ஏக்கள்! என்று குறிப்பிட்டிருந்தது.

    மேலும், அத்துடன் மஹோபாவைச் சேர்ந்த எம்எல்ஏ சபையில் மொபைல் கேம் விளையாடுகிறார். ஜான்சியின் பாஜக எம்எல்ஏ புகையிலை சாப்பிடுகிறார். இவர்களிடம் மக்களின் பிரச்சினைகளுக்கு பதில் இல்லை. சட்டப்பேரவையை பொழுது போக்கு இடமாக வைத்துள்ளனர்.

    இவர்களின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் வெட்கக்கேடானது!" என்று பதிவிட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இரண்டு எம்எல்ஏக்களின் செயலை விமர்சித்து வருகின்றனர்.



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காரை நிறுத்திய மக்கள், நாயை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • கார் மூலம் நாயை இழுத்துச் சென்ற மருத்துவர் மீது எஃப்ஐஆர் பதிவு.

    ஜோத்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று காரில் நாய் ஒன்று சங்கிலியால் கட்டப்பட்டிருந்த நிலையில் அதை ஓட்டிச் சென்ற நபர் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. காரை பின்தொடர்ந்து வந்த வாகனத்தில் இருந்தவர் இந்த வீடியோவை படம் பிடித்துள்ளார். போக்குவரத்து பரபரப்பு நிறைந்த சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    அந்த நாய் காருக்கு பின்னால் ஓட முடியாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்ததை கண்ட விலங்கு நல ஆர்வலர்கள் கோபத்தின் உச்சத்திற்கு சென்றனர். இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் காரின் முன் தனது வாகனத்தை நிறுத்தி அந்த ஓட்டுநரை கட்டாயப்படுத்தி காரை நிறுத்தச் செய்கிறார். உடனடியாக அங்கு கூடிய மக்கள் அந்த நாயின் சங்கிலியை அவிழ்த்து விட்டு அதை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர் அளித்த புகாரின் பேரில் அந்த டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் ஒரு மருத்துவர் என்பது தெரிய வந்துள்ளது. அவரது வீட்டின் அருகே இருந்த தெரு நாயை அகற்றும் நடவடிக்கையாக அதை காரில் கட்டி இழுத்து சென்றதாக அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

    விலங்கு வதை சட்டத்தின் கீழ் அந்த மருத்துவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த சிலர் இதயமற்ற அந்த மருத்துவரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ராஜஸ்தான் அரசை வலியுறுத்தி உள்ளனர்.

    ×